close
Choose your channels

10 வருஷத்துக்கு முன் பார்த்த காஜல் அகர்வால்.. நம்ப முடியாமல் ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்..!

Monday, April 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காஜல் அகர்வால் 10 வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக இருந்தபோது எப்படி இருந்தாரோ அதேபோல் தற்போது மாறி இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் இருந்தாலும் அவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ’பழனி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பாரதிராஜாவின் ’பொம்மலாட்டம்’ கார்த்தி நடித்த ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் விஜய்யுடன் ‘துப்பாக்கி’ சூர்யாவுடன் ’மாற்றான்’ ஆகிய படங்களில் நடித்த பிறகு தமிழின் முன்னணி நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ’ஜில்லா’ ’பாயும் புலி’ போன்ற படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூட அவர் ’இந்தியன் 2’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் வெயிட் போட்டிருந்த காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படத்தில் பத்து வருடங்களுக்கு முன் அதாவது ‘துப்பாக்கி’ படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment