பள்ளி பருவத்திற்கே திரும்பிவிட்டேன்: ராமாயணம் சீரியல் குறித்து பிரபல தமிழ் நடிகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்களின் பொழுதுபோக்கை கணக்கில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்று தூர்தர்ஷன் நேற்றே அறிவித்தது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வெளியான முதல் எபிசோடை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. நடுத்தர வயது உள்ளவர்கள் பலர் தங்கள் பள்ளி காலத்தில் தாங்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்த ராமாயணத் தொடரை மீண்டும் பார்த்தது குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியதாவது: பள்ளிப்பருவத்திற்கு மீண்டும் சென்று விட்டேன். நாங்கள் குடும்பத்துடன் ராமாயணம் மற்றும் மகாபாரதம் தூர்தர்ஷனில் பார்த்த காட்சி என் கண்முன் வருகிறது. நாங்கள் வாரந்தோறும் ராமாயணம் சீரியலை தவறாமல் பார்ப்போம். தற்போது மீண்டும் இந்த தொடரை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி இந்திய பெருங்காப்பியம் ஒன்றை இன்றைய குழந்தைகளும் அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்

காஜல் அகர்வால் மட்டுமின்றி மேலும் பலர் இந்த தொடரை மீண்டும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

More News

தனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்

கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக

கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.

கன்னியாகுமரியில் மேலும் ஒரு உயிரிழப்பு: கொரோனா காரணமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை

தாயின் மரணத்திற்கு கூட செல்லாமல் துப்புரவு பணியை தொடர்ந்த அதிகாரி

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களின்