தயாரிப்பாளர் ஆகும் அஜித்-விஜய் நாயகி!

  • IndiaGlitz, [Friday,February 22 2019]

விஜய் நடித்த 'துப்பாக்கி, 'ஜில்லா மற்றும் 'மெர்சல்,' அஜித் நடித்த 'விவேகம்' உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இவர் தற்போது 'குவீன்' ரீமேக் படமான 'பாரீஸ் பாரீஸ்' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் அவரே நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நாயகிகள் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவது மிக அரிதாக இருந்து வரும் நிலையில் காஜல் அகர்வால் தயாரிப்பில் இறங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

காஜல் அகர்வால் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நானி, காஜல் அகர்வால் நடித்த 'ஆ' என்ற படத்தை இயக்கியவர் என்பதும் தற்போது 'குவீன்' தெலுங்கு ரீமேக் படமான 'தட் இஸ் மகாலட்சுமி' படத்தை இயக்கி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் உருவாகவிருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

புலி, பாம்பு, தேன்: விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸின்' சூப்பர் டிரைலர்

விஜய்சேதுபதியின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'ஆரண்ய காண்டம்' என்ற தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத படத்தை கொடுத்த இயக்குனர் தியாகராஜன்

12வது ஐபிஎல் தொடக்க விழா கேன்சல்! ஏன் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி 12வது ஐபிஎல் தொடங்கவுள்ளது.

கமலும் ஸ்டாலினும் அடித்து கொள்வதை பார்த்து சிரிக்கின்றோம்: சீமான்

கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று கிராம சபை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்

பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்!

பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை

தண்ணீரை விட தன்மானம் முக்கியம்: ரஜினியை விமர்சித்த கமல் கட்சி நடிகை

ரஜினியும் கமலும் நாற்பதாண்டு நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக ரஜினி மீது கமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே