close
Choose your channels

கமல், ரஜினி கலந்து கொள்ள இருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பா? புதிய அறிவிப்பு..!

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிசம்பர் 24 ஆம் தேதி திரையுலகினர் ஒன்று சேர்ந்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த ’கலைஞர் 100’ விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகினர் சார்பில் ’கலைஞர் 100’ விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 24ஆம் தேதி இந்த விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த திட்டமிடப்பட்டு அதற்கான அழைப்பிதழ் அடிக்கப்பட்டிருந்தது. மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அஜித். விஜய் உள்பட அனைத்து நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டாலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வற்புறுத்தப்பட மாட்டாது என்றும் ஆர்கே செல்வமணி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த ’கலைஞர் 100’ விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி இந்த விழா நடைபெறும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment