கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா? மாஸ் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிச்சா சுதீப்பின் 46வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவை தாணு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டு மகன்களுடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்கள்

இந்த வாரம் ஓடிடியில் இரண்டு தமிழ் திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் அதே வெள்ளிக்கிழமைகளில் ஓடிடியில் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன

அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கியது உண்மையா? தியேட்டர் நிர்வாகம் விளக்கம்..!

வட சென்னையில் உள்ள அகஸ்தியா என்ற பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கிவிட்டதாகவும் அதில் அவர் மல்டிபிளக்ஸ் கட்டப் போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த விளக்கத்தை

பிரபல நடிகை கார் விபத்தில் மரணம்.. வருங்கால கணவருடன் சென்றபோது ஏற்பட்ட சோகம்..!

பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக காலமானார்

ரூ.15 லட்சம் மதிப்புள்ள பைக் பரிசு கொடுத்த அஜித்.. யாருக்கு தெரியுமா?

நடிகர் அஜித் தன்னுடன் பைக் ரைடு செய்தவருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.