close
Choose your channels

ரூ.15 லட்சம் மதிப்புள்ள பைக் பரிசு கொடுத்த அஜித்.. யாருக்கு தெரியுமா?

Wednesday, May 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தன்னுடன் பைக் ரைடு செய்தவருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் உலகம் முழுவதும் பைக் பயணம் செய்வதில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பைக் ரைடு செய்து விட்ட நிலையில் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் சமீபத்தில் பைக் ரைடு செய்தார் என்பதையும் பார்த்தோம்.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் அஜித் பைக் ரைடு செய்த மேப்பை வெளியிட்ட அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அடுத்த கட்ட பயணம் நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். அது மட்டும் இன்றி ஏகே மோட்டோ ரைடு என்ற பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றையும் அஜித் ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தன்னுடன் பைக் ரைடு செய்யும் குழுவினர்களில் ஒருவர் சுகத் என்பவருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக் பரிசாக அஜித் கொடுத்துள்ளார். அஜித்தின் பைக் ரைடுக்கு சரியாக திட்டமிட்டு ஏற்பாடு செய்வது இவர்தான் என்றும் அதனால் தான் அவருக்கு இந்த பரிசை அஜீத் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.