தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும்: 2.0 குழுவினர்களுக்கு எஸ்.தாணு வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது. சமூக வலைத்தள பயனாளிகளும் திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் 2.0 படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

உலக சினிமா, இனி தமிழ் சினிமாவைப் போல் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்ட 2.0 க்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்பமும், நேர்த்தியும் 100 சதவிகிதம். நம்ம SUPER STAR என்றும் 1000 சதவிகிதம் என்று தாணு பதிவு செய்துள்ளார். ஒரு பிரமாண்டம் மற்றொரு பிரமாண்டத்தை பாராட்டியுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

'2.0' திரைப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகமே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் செய்துள்ளது

ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

பிரமாண்டம் என்றால் என்ன? என்பதற்கு உதாரணமாக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள முதல்வருக்கு கமல், விஜய்சேதுபதி நன்றி

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி கஜா புயல் தாக்கி பலத்த சேதங்களை உண்டாக்கிய நிலையில் தமிழகத்தில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புயல் நிவாரண நிதி குவிந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு படத்தின் தகவல்கள்

தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற சிவகார்த்திகேயன், முதல்முறையாக தயாரித்த 'கனா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக