close
Choose your channels

தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும்: 2.0 குழுவினர்களுக்கு எஸ்.தாணு வாழ்த்து

Thursday, November 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது. சமூக வலைத்தள பயனாளிகளும் திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் 2.0 படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

உலக சினிமா, இனி தமிழ் சினிமாவைப் போல் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்ட 2.0 க்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்பமும், நேர்த்தியும் 100 சதவிகிதம். நம்ம " SUPER STAR " என்றும் 1000 சதவிகிதம் என்று தாணு பதிவு செய்துள்ளார். ஒரு பிரமாண்டம் மற்றொரு பிரமாண்டத்தை பாராட்டியுள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.