close
Choose your channels

விறுவிறுப்பான முன்பதிவு.. முதல் நாள் வசூல் எவ்வளவு ஆகும்? ரூ.1000 கோடியை நெருங்குமா 'கல்கி 2898 ஏடி'?

Tuesday, June 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடிப்பில் உருவான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் முன்பதிவு மற்றும் முதல் நாளில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளின் டிக்கெட் முன்பதிவு மூலம் விற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலும் சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளதாகவும் விறுவிறுப்பான முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முன்பதிவில் ஏற்பட்டுள்ள விறுவிறுப்பை பார்க்கும் போது முதல் நாள் வசூல் 200 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, உள்ளிட்ட மல்டி ஸ்டார் படம் என்பதால் இந்த படம் இந்தியா முழுவதும் வசூலை குவிக்கும் என்றும் படம் ஹிட்டானால் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment