close
Choose your channels

குருவை என்னால அழிக்க முடியாது, ஆனா தோற்கடிக்க முடியும்: அரவிந்த்சாமியின் ‘கள்ளபார்ட்’ டீசர்

Sunday, June 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரவிந்த்சாமி, ரெஜினா நடித்த ‘கள்ளபார்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரவிந்த் சாமி செய்யும் திரில்லான மர்மமான வேலைகள்தான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது. படம் முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘குருவுக்கு தெரிஞ்சா உயிரோட இருக்க முடியாது என ரெஜினா கூற, அதற்கு அரவிந்த்சாமி, ‘குருவை என்னால அழிக்க முடியாது, ஆனால் தோற்கடிக்க முடியும் என கூறும் வசனம் இந்த டீசரின் சிறப்பு.

அரவிந்த்சாமி, ரெஜினா, பார்த்தி, ஹரிஷ் பெராடி, பேபி மோனிகா உட்பட பலரது நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை ராஜபாண்டி என்பவர் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இளையராஜா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment