உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் சிலவும் வடமாநில வடமாநிலங்கள் சிலவும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலாளர் சமீபத்தில் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் நமது முதல்வர் யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கின்றார்? அவர் தனது எஜமானின் உத்தரவுக்காக காத்திருகின்றாரா? என மக்களின் குரலை நான் முன்மொழிகிறெனெ. உடனே முதல்வர் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும்

மேலும் கமல்ஹாசன் இன்னொரு டிவிட்டில் கூறியபோது, ‘அண்டை மாநிலங்கள் சில கோவிட் 19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் பெறும் நேரமல்ல, மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

More News

இன்று ஒரே நாளில் 106 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் 1000ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இன்று பேரதிர்ச்சியாக கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு பாசிட்டிவ்

மத்திய பிரதேச மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ வெளியிட்ட 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னை ஜெமினி மேம்பாலத்தில் ஓடிய பாமாயில் ஆறு: பரபரப்பு தகவல்

சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென பாமாயில் ஆறு ஓடியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்

ஷங்கர், முருகதாஸை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்

முன்னணி இயக்குனர்களை விட இருமடங்கு சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளமும், அஜித், விஜய் சம்பளம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும்