கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,November 19 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' மற்றும் 'தூங்காவனம்' ஆகிய இரண்டு படங்களும் சீரியஸாக இருந்ததால் அடுத்த படத்தை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக்க கமல் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் இந்த தகவலை உறுதி செய்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கமலுடன் அமலா, ஷரீனா வகாப் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

நியூயார்க், மற்றும் ஜார்ஜியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதற்கு முன்னர் பயிற்சி எடுத்து கொண்டு மொத்தம் 50 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமலின் திரைக்கதையில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நகைச்சுவை மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய மெசேஜும் இருக்கும் என கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட தலைப்பு

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல்...

கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பூங்கொத்து கொடுத்து பாராட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' திரைப்படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

இந்தியில் ரீமேக் ஆகும் மணிரத்னத்தின் காதல் காவியம்

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த 'ஓகே கண்மணி' என்ற காதல் காவியம்...

'சவுகார்பேட்டை' இயக்குனரின் அடுத்த பேய்ப்படம்

இயக்குனர் வடிவுடையான இயக்கத்தில் உருவான ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்த சவுகார்பேட்டை திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் த்ரிஷா-நயன்தாரா?

கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகைகள் நயன்தாரா...