close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' மற்றும் 'தூங்காவனம்' ஆகிய இரண்டு படங்களும் சீரியஸாக இருந்ததால் அடுத்த படத்தை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக்க கமல் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் இந்த தகவலை உறுதி செய்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கமலுடன் அமலா, ஷரீனா வகாப் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

நியூயார்க், மற்றும் ஜார்ஜியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதற்கு முன்னர் பயிற்சி எடுத்து கொண்டு மொத்தம் 50 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமலின் திரைக்கதையில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நகைச்சுவை மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய மெசேஜும் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.