காயத்ரியின் சர்ச்சை 'வார்த்தை' குறித்து கமல் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும், தலைவியுமான காயத்ரி ரகுராம் நேற்று சர்ச்சைக்குரிய ஜாதியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்.

இந்த வார்த்தையை பயன்படுத்திய காயத்ரிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. வேல்முருகன், வன்னி அரசு போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் நேற்றைய தொலைக்காட்சிவிவாதம் ஒன்றில் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய பேட்டியில் இதுகுறித்து கமல் கூறியபோது, 'காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்? நான் வாழும் சொசைட்டில இதைவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க, அதை உங்களால் தடுக்க முடிகிறதா? என்று கூறினார்.

More News

'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கியது எப்படி? திக் திக் நிமிடங்கள்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் திலீப், தனது சொந்த பகையை மனதில் வைத்து பிரபல நடிகை ஒருவரை கூலிப்படைகள் வைத்து பழிவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது

இந்து மக்கள் கட்சிக்கு கமலின் சாட்டையடி பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டை கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.