கமல், ரஜினி பட நடிகையின் மகளுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் மகளுக்கு லண்டனில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சென்னையில் தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் மற்றும் வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியா. இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஸ்ரீபிரியா மற்றும் ராஜ்குமார் தம்பதியின் மகள் சினேகாவின் திருமணம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினேகா மற்றும் அன்மோல் சர்மாவின் திருமணம் லண்டனில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் சென்னையில் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய ஸ்டைலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து ஸ்ரீப்ரியாவின் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments