அப்பா-மகளா? நெருங்கிய நண்பர்களா? கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசனின் உரையாடல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் அப்பா மகள் உறவா? அல்லது நண்பர்களா? என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’இனிமேல்’ என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியானது என்பதும் கமல்ஹாசன் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த இந்த ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆல்பத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோவின் புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

இருவரையும் பார்க்கும்போது அப்பா மகள் போல் தெரியவில்லை, நெருங்கிய நண்பர்கள் போல் தெரிகிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் இதன் முழு வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான ’இனிமேல்’ என்ற ஆல்பம் சமூக வலைதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று உள்ளது என்பதும் ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடலை அவரே கம்போஸ் செய்தார் என்பதும் இந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்ற அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

இன்று சந்தானம், நாளை கவின்.. அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகள்.. இன்னும் ஒரு வாரத்தில் செம்ம விருந்து..!

வரும் மே 10ஆம்  தேதி சந்தானம் நடித்துள்ள 'இங்கு நான் தான் கிங்கு' மற்றும் கவின் நடித்த 'ஸ்டார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின்

நான் விஷாலும் இல்லை, சிம்புவும் இல்லை.. எவனும் பொண்ணு தர மாட்டேங்குறான்” இங்க நான்தான் கிங்கு' டிரைலர்..!

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வதற்கு நான் விஷாலும் அல்ல, எப்பவும் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும் சிம்புவும் அல்ல, எவனும்

எங்கப்பாவை போலவே என் கணவர் மு.க. முத்து ரொம்ப அழகா பாடுவாரு - சிவகாமிசுந்தரி பெருமிதம்

மலேசியா வாசுதேவன், ஏ.எல். ராகவன் போன்ற போன்ற பாடகர்களையும் அறிமுகப்படுத்தியது தனது தந்தை தான் என பெருமையுடன் கூறியுள்ளார் சி.எஸ். ஜெயராமனின் மகள் சிவகாமிசுந்தரி.

விஜய்யை அடுத்து விக்ரம் மீது புகார் அளித்த நபர்.. ஐபிசி 1860 கீழ் 326ல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

விஜய் நடித்த 'கொட்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியான தினத்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த நபர் தற்போது விக்ரம் மீது புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா? பூஜா ஹெக்டேவுடனும் ஒரு புரொஜக்ட்..!

பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக மாஸ் நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகை பூஜா ஹெக்டேவுடன்