இன்று கடற்கரை, நாளை நாடு முழுவதும்: கமல் ரசிகர்கள் ஆரம்பித்த சுத்தப்பணி

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று முதல் தங்களுடைய சுத்தப்பணியை ஆரம்பித்துள்ளனர். இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்ட கமல் ரசிகர்கள் சுமார் 500 பேர், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் அந்த பகுதி மக்களும் இணைந்து கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

மேலும் கடற்கரையில் போடப்படும் குப்பைகள் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களான ஆமை போன்றவை பாதிக்கப்படுவதாகவும், எனவே கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இன்று தாங்கள் கடற்கரையை சுத்தப்படுத்துவது போல் வரும் 21ஆம் தேதி முதல் கமல்ஹாசன், கட்சி தொடங்கி நாட்டை சுத்தப்படுத்துவார் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் கூறினர்.

More News

இணைந்தது இரண்டு தமிழ் நடிகர்களின் கட்சிகள்

தமிழகத்தில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் தனித்தனியாகவே கட்சி ஆரம்பிக்கவுள்ளனர்.

அஜித்தின் விசுவாசம்' லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

உலககோப்பை வெற்றி குறித்து சேவாக்-சச்சின்

இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்டோரின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஓவியாவின் லேட்டஸ்ட் 'லவ்' டுவீட்

நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை !! என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால் தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன்: ஓவியா

டிஜிபியிடம் பாராட்டு பெற்ற தமிழ் நடிகை

தமிழ், மற்றும் மலையாள திரைப்பட்ங்களில் நடித்து வரும் நடிகை சனுஷா, சமீபத்தில் ரயிலில் சென்றபோது சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.