வெள்ள நிவாரண நிதி: கார்த்தியிடம் கமல்ஹாசன் கொடுத்த ரூ.15 லட்சம்

  • IndiaGlitz, [Friday,December 11 2015]

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் மூலம் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது கமலஹாசனும் இணைந்துள்ளார். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் கமல்ஹாசன் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நட்களுக்கு முன் வெள்ளச்சேதம் குறித்து கமல் தெரிவித்த ஒரு கருத்துக்கு தமிழக அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கமல் தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனிடையே கமல் ரூ.15 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தனி ஒருவன்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

சமீபத்தில் 'தனி ஒருவன்' என்ற மெகா ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயம் ராஜா விஜய்யின் 60வது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார்...

தனுஷின் தங்கமகன்' இன்று சென்சார்?

அனேகன்' மாரி' படங்களை தொடர்ந்து இவ்வருடத்தின் மூன்றாவது தனுஷ் படமான 'தங்கமகன்' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகும்...

'ரஜினிமுருகன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியது....

தனுஷின் 'தங்கமகன்' டிரைலர் விமர்சனம்

தனுஷ் நடித்த தங்கமகன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்...

சீயான் விக்ரமுக்கு பாலா விதித்த நிபந்தனைகள்

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடித்த 'தாரை தப்பட்டை'...