close
Choose your channels

திடீரென டிரெண்ட் ஆகும் கமல்ஹாசனின் 'குணா'.. எல்லாம் மலையாள பாய்ஸ் மகிமை..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் உருவான ’குணா’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 33 ஆண்டுகள் கழித்து திடீரென இந்த படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ’மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற மலையாளத் திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான நிலையில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் கதைப்படி ’மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற நண்பர்கள் குழுவினர் கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நிலையில் அங்குள்ள குணா குகையில் 900 அடி பள்ளத்தில் ஒருவர் எதிர்பாராமல் விழுந்து விடுகிறார். அதன் பிறகு அவரை மீட்க நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்ற பரபரப்பான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் பல காட்சிகளில் ’குணா’ படத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பது தான் ’குணா’ திரைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’குணா’ திரைப்பட குழுவினருக்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் தான் படம் தொடங்குகிறது.

அது மட்டுமின்றி இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழுவினர் அந்த படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன்’ பாடலை ஒரு முக்கியமான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த பாட்டு வரும் காட்சியை பார்க்கும் ரசிகர் ஏற்கனவே ’குணா’ படத்தை பார்த்திருந்தால் உண்மையில் ஆச்சரியம் அடைவார்.

இந்த நிலையில் ’குணா’ படம் தற்போது ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய சரியான நேரம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment