close
Choose your channels

உலக நாயகனின் 'விக்ரம்' படம் குறித்த மாஸ் தகவல்!

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன

முதல்கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களுக்கு வித்தியாசமான பின்னணி இசையை அனிருத் கம்போஸ் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment