ரஜினியை திடீரென சந்தித்த கமல்: சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கேட்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் அவர் ஆன்மீக ஆட்சியை தமிழகத்தில் நடத்துவார் என்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் சமீபத்தில் அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்றும் அறிவித்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார். விரைவில் ரஜினியை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை பெறுவதற்காக கமல் ரஜினியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது 40 ஆண்டு கால நண்பர் கமலுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

'இரு உனக்கு பாம் வைக்குறேன்': ஷிவானி பதிலுக்கு பாலாவின் ரியாக்சன்

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் 'காதல் கண்ணை மறைக்கிறது என்று ஆரியே விமர்சனம் செய்யும் அளவுக்கு அவர்களது

'உனக்கென்ன மேலே நின்றாய்': காலத்தால் அழியாத எஸ்பிபியின் பாடல்!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரக்கணக்கான பாடல்கள் மறக்க முடியாத, காலத்தால் அழிக்க முடியாத, காவிய பாடல்கள் என்றாலும் ஒரு சில பாடல்கள் மனதை விட்டு என்றுமே

முடிவுக்கு வருகிறது 7 ஆண்டு திருமண வாழ்க்கை: விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிய உலகப்புகழ் பெற்ற நடிகை!

உலக புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் அழகி கிம் கர்தாஷியன் தனது கணவர் கென்யா வெஸ்ட் என்பவரை விவாகரத்து செய்ய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: '83' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்று தந்தவர் கபில்தேவ் என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் '83' என்ற டைட்டிலில் தயாராகி வந்தது என்பதும் தெரிந்ததே 

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று மெட்ரோ ரயில் என்பதும் இந்த மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் டிராபிக் பிரச்சனை இன்றி,