கமல்ஹாசனின் புதிய தோற்றம்: ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்க்கும் 'விக்ரம்'

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக தாடியுடன் காட்சியளிக்கும் நிலையில் ‘விக்ரம்’படத்திலும் அதே தோற்றத்தில் காட்சி அளிப்பாரா? என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழுந்தது.

இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் கமல்ஹாசன் ‘விக்ரம்’படத்தில் மிகவும் இளமையாக கடந்த 80களில் இருந்தது போன்ற ஒரு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ‘விக்ரம்’ திரைப்படம் ஒரு செம விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி வில்லனாகவும் பகத் பாசில் விஞ்ஞானியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஷிவானி நாராயணன், ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் சூப்பர் ஃபர்ஸ்ட்லுக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி

'மகான்' துருவ் விக்ரம் கேரக்டர்: அட்டகாசமான போஸ்டர்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில், விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் 'மகான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகர் ஜெயம் ரவி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளராக 'செம்பருத்தி' சீரியல் நடிகை!

விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மூடப்படுகிறதா? தொழிலாளர்கள் நிலைமை?

உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 20