close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளராக 'செம்பருத்தி' சீரியல் நடிகை!

Friday, September 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜே பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதும் அது மட்டுமின்றி ஷகிலாவின் மகள் மிளா, சார்பாட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப், தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி, நடிகை பிரதைனி சர்வா, மாடல் மற்றும் நடிகர் கோபிநாத் ரவி, நடிகை சூசன் ஜார்ஜ் ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ஜீ டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் ஆதிக்கடவுள் அகிலாண்டேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வள்ளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான பிரியாராமன், அதன்பின்னர் சுப்ரமணியசுவாமி, சூரியவம்சம், பொன்மனம், ஹரிச்சந்திரா, புதுமைப்பித்தன் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். இந்த நிலையில் ‘செம்பருத்தி’ சீரியலில் கடந்த 4 ஆண்டுகளாக பிரியாராமன் நடித்து வரும் நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.