close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த படம் 9 பாகங்களாக தயாராகிறதா? ஆச்சரிய தகவல்..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 9 பாகங்களாக திரையிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாகவும் பிரபாஸ் நாயகனாகவும் நடித்து வரும் திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, உட்பட பல மல்டி ஸ்டார்கள் நடித்திருக்கும் நிலையில், பான் இந்திய திரைப்படமாக மட்டுமின்றி பான் உலக திரைப்படமாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது இந்த படத்தை 9 பாகங்களாக திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வந்தாலும் படக்குழுவினர் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

ஹாலிவுட்டில் மட்டுமே 9 பாகங்கள் 10 பாகங்கள் என ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அது இந்திய திரைப்படத்தில் சாத்தியமா? அத்தனை பாகங்கள் உருவாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஒத்துழைப்பார்களா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment