டிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்றும் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு சில மணி நேரங்களில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மலையாள திரைப்படம் ஒன்றின் டீசரை வெளியிட்டு உள்ளார். ’ஆர்க்கரியம்’ (Aarkkariyam ) என்ற மலையாள படத்தின் டீசரை வெளியிட்ட அவர் இதுகுறித்து கூறியதாவது:

பல திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ள ’ஆர்க்கரியம்’ என்ற படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

பிஜூமேனன், பார்வதி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சானு ஜான் வர்கீஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

More News

சேலம் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு! 4 தினங்களில் இருவருக்கு!

சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, ஒழுங்குமுறை பணியில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

சிம்பு பட்டத்தை பிரேம்ஜிக்கு கொடுத்த பிக்பாஸ் நடிகர்!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகர் சிம்பு திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார் என்பதும் தற்போது அவர் சிலம்பரசன் டிஆர் என்று மட்டுமே தனது பெயரை திரையில் பயன்படுத்தி வருகிறார்

போலீஸ் உடையணிந்து சினிமா பாணியில் கொள்ளை அடித்த திருடர்கள்… காவல் துறையின் அதிரடி!

கன்னியாக்குமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சிலர் போலீஸ் உடையணிந்து கொண்டு ரூ.80 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா?

இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது.

சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, இம்மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது