கெஜ்ரிவால் பேசியிருந்தாலும் தவறு தவறுதான்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறு தவறுதான் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் அதிக இடங்களை ஆக்கிரமித்து கொள்வதாகவும், அதனை தடுத்து டெல்லி மாணவர்கள் அதிகம் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். டெல்லி முதல்வரின் இந்த கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய கமல்ஹாசன் இதுகுறித்து என்ன கருத்து தெரிவிக்கவுள்ளார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'தனி மாநில கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ் மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசியதாக கருதுகிறேன் என்றும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறு தவறுதான் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த தினத்தன்று நேரில் வாழ்த்தியவரும், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தபோதிலும் அவருடைய கருத்து தவறுதான் என்று நேர்மையாக பதிலளித்த கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

ஓடும் ரயிலில் ரிஸ்கான முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

ரிஸ்க்கான செல்பிகள் உள்பட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் காதல் ஜோடி ஒன்று ஒடும் ரயிலில் ரிஸ்க்கான முத்தம் கொடுத்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கணவரின் பெயரை தொடையில் டாட்டூ வரைந்த ரஜினி நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் நாயகியான ராதிகா ஆப்தே, தற்போது ஒரு ஆங்கில படம், இரண்டு இந்தி படங்களில் நடித்துவருகிறார்

நமது முதலமைச்சர் மகாத்மா காந்தி மாதிரி: பிரபல இயக்குனர்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் மகாத்மா காந்திக்கு சமமானவர் என்று பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா தெரிவித்துள்ளார்.

கலப்பு திருமணம் செய்த மகளை ஈவு இரக்கம் இன்றி எரித்த கொடூர தந்தை! பதற வைக்கும் சம்பவம்!

பெற்றோரின் விருப்பத்தை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை, அவருடைய தந்தை பூட்டிய வீட்டில் வைத்து ஈவு இரக்கம் இன்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம், மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் யோகிபாபு-சூரி

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்து நடிப்பது அரிதான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு படத்தில் முன்னணி காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும்