ஃபேவரிட்டிசம் குறித்து கன்னத்தில் அறைவது போல் கூறிய கமல்.. மாயா, பூர்ணிமா அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபேவரிட்டிசம் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் ஒரு போட்டியாளருக்கு விருப்பமானவர் என்ன தப்பு செய்தாலும் கண்டு கொள்ளவில்லை, அவருக்கு ஆதரவாக இருப்பதையே ஃபேவரிட்டிசம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் ’யாருடைய ஃபேவரிட்டிசம் இந்த விளையாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று நினைக்கிறீர்கள்’ என்ற கேள்வியை கேட்கிறார். அப்பொழுது பூர்ணிமா எழுந்து ’அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் ஃபேவரிட்டிசமாக உள்ளனர் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து ஜோவிகா கூறியபோது, ’தினேஷ்,மணிக்கு ஃபேவரிட்டிசம் பண்றார்’ என்று கூறுகிறார். தினேஷ் எழுந்து ’மாயா மற்றும் பூரியுமா ஆகிய இருவரும் ஃபேவரிட் செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். அதன்பின்னர் அர்ச்சனா எழுந்து ’மாயா தான் தலைமை, மற்றவர்கள் அவருடைய ஃபாலோயர்கள், இவர் சொல்வதை மற்றவர்கள் மற்றவர்கள் செய்வார்கள்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து மாயா விளக்கம் அளிக்கும்போது ’பூர்ணிமாவை வந்து நான் காப்பாற்றுகிறேன் என்று நினைக்கிறேன், நிஜமாகவே பூர்ணிமா மீதுள்ள ஒரு அன்பு என்னை தடுக்குது’ என்று கூறுகிறார்.

அப்போது கமல்ஹாசன் ஃபேவரிட்டிசத்தின் ஆபத்து என்னவென்றால் திறமை இல்லாதவர்களை தூக்கி மேலே வைத்து விடும், கிட்டத்தட்ட லஞ்சம் மாதிரி, கொடுப்பதும் தப்பு வாங்குறதும் தப்பு என கூற மாயா மற்றும் பூர்ணிமா அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இன்றைய எபிசோடில் ஃபேவரிட்டிசம் குறித்து இன்னும் அதிகமாக கமல் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தினேஷுக்கு ஏற்பட்ட இழப்பு.. இனி அவருக்கு பதில் இவர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த தினேஷ், தான் நடித்து வந்த முக்கிய தொடரை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோவிகா எவிக்சனில் திடீர் திருப்பம்.. மீண்டும் ஒரு வாய்ப்பா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோவிகா வெளியேறி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியான நிலையில்  தற்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக

இந்த தடவை முடிவோட தான் போறாங்க.. மீண்டும் அஜர்பைஜான் செல்லும் 'விடாமுயற்சி' குழு..!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடந்தது என்பதும் சமீபத்தில் தான் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதையும் பார்த்தோம்.

ஜெயம் ரவி, துல்கர் சல்மானை தொடர்ந்து இன்னொரு ஹீரோ.. கமலின் 'தக்ஃலைப்' படத்தின் மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்ஃலைப்' படத்தின்  டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி பிரமிக்க வைத்தது என்பது தெரிந்ததே.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வார எவிக்சன் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு தகவல்..!

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை  பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் மூவரில் ஒருவர் வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.