close
Choose your channels

'விக்ரம்' படம் பார்த்தால் மம்முட்டி மனம் மாறும்: கமல்ஹாசன்

Wednesday, June 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விக்ரம்’ படத்தை பார்த்தால் பிரபல நடிகர் மம்முட்டியின் மனம் மாறும் என கமலஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிக்காக கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒருசில வெளிநாடுகளுக்கும் சென்று அவர் புரமோஷன் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து ’விக்ரம்’ படத்தை புரமோஷன் செய்தார். இந்நிலையில் கேரளாவில் நடந்த மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசிய போது ’நானும் மம்முட்டியும் இணைந்து நடிக்க பல கதைகளை விவாதித்தோம். ஆனால் சரியாக அமையவில்லை. எனக்கு ஓரளவுக்கு திருப்தி என்றாலும் மம்முட்டி திருப்தியடையாமல் கொஞ்சம் பொறுங்கள், நல்ல கதையாக அமையட்டும், நாம் அனைவரும் சேர்ந்து நடிப்போம் என்று கூறினார். இப்போது ’விக்ரம்’ படம் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தை பார்த்தபின் மம்முட்டி நிச்சயம் என்னுடன் இணைந்து நடிக்க சம்மதிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மோகன்லாலுடன் ’உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில் மம்முட்டியுடனும் விரைவில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.