'இந்தியன் 2' படத்திற்காக களமிறங்கிய கமல்: எங்கே சென்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 27 2022]

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் களத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை விட்டுவிட்டு ராம் சரண் தேஜாவின் படத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் சென்று விட்டதால் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்திற்கு தயாராவதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அங்கு அவர் மூன்று வாரங்கள் இருப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று அடுத்த வருடம் இந்த படம் கண்டிப்பாக வெளியாகும் என்றும் கூறப்படுவதால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்று திரையுலகில் இருந்து விலகிவிட்ட நிலையில் அவரது கேரக்டர் நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் காலமாகி விட்டனர். இதனை அடுத்து இந்த கேரக்டர்களுக்கு மாற்று ஏற்பாடாக இயக்குனர் ஷங்கர் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

சென்னை திரும்பியதும் அஜித் சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

 நடிகர் அஜித் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்று இருந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

நாளை தனுஷ் பிறந்த நாள்: செம ட்ரீட் கொடுக்கும் 'வாத்தி' படக்குழு!

 தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். 

அருள்நிதியின் ”தேஜாவு" வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் விஜய் பட வில்லன்? பான் - இந்தியா திரைப்படமா?

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

படம் ஆரம்பிக்கும் முன்னரே வந்த எச்சரிக்கை: என்ன செய்ய போகிறார் சூர்யா பட இயக்குனர்?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' பட இயக்குனர்  ஞானவேல் சமீபத்தில் 'தோசா கிங்' என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க்கும் முன்னரே