மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்: 'இந்தியன் 2' அரிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்!

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் இந்த படம் குறித்து கூறியபோது, ‘கமல்ஹாசன் அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்புக்கு தயாராகி விடுவார் என்றும், அவர் இந்த படத்தில் 90 வயது கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு குறித்த அரிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலைக்கு முன் கமலஹாசன் புகைப்படம் எடுப்பது போல் இந்த ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த சிலை கடந்த 1997ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.

More News

'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: குஷ்பு வேண்டுகோள் 

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களிடம் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வைரமுத்துவை சந்தித்த விஜய் டிவி பிரபலம்.. சின்மயி கமெண்ட் என்ன தெரியுமா?

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்ததாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு பாடகி சின்மயி கொடுத்த கமெண்ட் பெரும் பரபரப்பை

கிளைமாக்ஸ் செம மாஸ்-ஆ இருக்கும்: 'வாரிசு' படம் குறித்து கூறிய பிரபலம்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாஸ்-ஆ இருக்கும் என அந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ்-எச் வினோத் படத்தின் மாஸ் அப்டேட்.. தெறிக்க போகும் கோலிவுட்!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை இயக்கி முடித்துள்ள எச் வினோத் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'வாரிசு' - 'துணிவு': இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான உடன்பாடு!

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் புக் செய்வதில் போட்டி ஏற்பட்டது