close
Choose your channels

'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: குஷ்பு வேண்டுகோள் 

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களிடம் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு என்பதும் தற்போது அவர் பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில் அவர் ’தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிதுகாலம் நான் ஓய்வில் இருந்தேன் என்றும் எனது மூத்த சகோதரர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார் என்றும் கடந்த 4 நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலை தற்போது சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் அவர் குணமடைய தயவு செய்து எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவுக்கு தாங்கள் கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறோம் என கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.