close
Choose your channels

கமல்ஹாசனின் அடுத்த தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் அறிவிப்பு..!

Wednesday, February 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது விறுவிறுப்பாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்நிறுவனம் ‘எஸ்கே 21’, ‘எஸ்டிஆர் 48’, ‘தக்லைப்’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனேகமாக இது ஒரு மியூசிக் ஆல்பமாக இருக்கலாம் என்றும் ஸ்ருதிஹாசன் பாடல் எழுதி, பாடி, நடனம் ஆட இருக்கும் இந்த மியூசிக் வீடியோவை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ராஜ்கமல் தயாரிப்பில் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் பணிபுரிய இருப்பதாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் ஒரு புரொஜெக்ட்டில் இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.