முப்படை தளபதி உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: கமல்ஹாசன் இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளான நிலையில் அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்கள் என உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11:45 குன்னூரில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இந்த விபத்து குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

More News

பெருந்தன்மையுடன் விட்டுவிடுவோம்: அஸ்வின் சர்ச்சை குறித்து பிரபல தயாரிப்பாளர்!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய விஷயம் கடந்த இரண்டு நாட்களாக மீம்ஸ்களாக வைரலாகி வரும்

நடிகர் அருண்விஜய் நடிக்கும் “யானை“ படத்தின் புது அப்டேட்!

வெற்றிப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் தற்போது “யானை“ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரே ஒரு ஸ்லோகன்: தாமரையை கதறி அழவைத்த பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு ஸ்லோகனை சொல்லி தாமரையை கதறி அழ வைத்த பிரியங்காவின் செயல் குறித்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. 

இந்தியாவின் லெஜண்ட் கிரிக்கெட்டர்கள் திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இருவரும் சந்தித்துக் கொண்ட

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து… முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?‘

குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 7