உச்சநீதிமன்றம் சொன்னது ஆறுதல் அளிக்கின்றது: கமல்ஹாசன் டுவிட்!

  • IndiaGlitz, [Tuesday,December 13 2022]

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து ஆறுதல் அளிக்கின்றது என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகள் இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கில் தமிழக அரசு, ‘ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல என்றும் உச்சநீதிமன்ற அதிகாரிகள் நேரில் ஒருமுறை வந்து அதை பார்த்து அதை புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் பின்னர் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வரும் 2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இது குறித்து உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.

More News

'அந்த மனசு தான் சார் கடவுள்.. விஜய்யின் நெகிழ்ச்சியான புகைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் இன்றைய புகைப்படம் ஒன்றை அவரது மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'அந்த மனசு தான் சார்

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படக்குழுவினர் திடீர் கைது: என்ன காரணம்?

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'பிச்சைக்காரன் 2' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை . 

கடற்கரை மணல்..  குரங்கு போல் போஸ்: பிக்பாஸ் நடிகையின் கிளாமர் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குகள் மாதிரி போஸ் கொடுத்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

காலில் விழுந்து ஆசி பெற்ற கெளதம் கார்த்திக்.. யாரிடம் தெரியுமா?

நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த நிலையில் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்.. மணக்க மணக்க தயாராகும் பிரியாணி

தளபதி விஜய் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டதாகவும் இதனை அடுத்து முதல்கட்டமாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை கடந்த நவம்பர் மாதம் சந்தித்ததாகவும்