close
Choose your channels

அமிதாப்பின் 'ஷோலே' படத்தில் கமல் பணிபுரிந்தாரா? அவரே கூறிய ஆச்சரிய தகவல்..!

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமாமாலினி நடித்த ‘ஷோலே’ திரைப்படம் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் பணிபுரிந்துள்ளார் என்ற தகவலை அவரே கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்ற படம் ’கல்கி 2989 ஏடி’. இந்த படத்தின் முக்கிய நிகழ்வு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கமல்ஹாசன் நேரில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அவர் அமிதாப்பச்சனின் ‘ஷோலே’ படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததாக கூறினார்.

‘ஷோலே’ படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றினேன், அந்த படம் ரிலீஸ் ஆன போது அந்த படத்தை பார்த்துவிட்டு என்னால் தூங்க முடியவில்லை, அந்த அளவுக்கு ஒரு டெக்னீஷியனாக அந்த படத்தை நான் வெறுத்தேன் என்று கூறினார். நான் மிகப்பெரிய இயக்குனர் உடன் ‘ஷோலே’ படத்தில் பணி புரிந்திருக்கின்றேன் என்று தெரிந்தாலும் அப்போது என்னுடைய ரியாக்ஷன் அதுவாக தான் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவலை அடுத்து தான் கமல்ஹாசன் ‘ஷோலே’ படத்தில் பணி புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. மேலும் ரஜினிகாந்தின் முதல் திரைப்படமாகவும், கமல்ஹாசன் ஹீரோவாகவும் நடித்த ’அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ‘ஷோலே’ படமும் ஒரே நாளில் வெளியானது என்பது ஒரு ஆச்சரியத்தக்க ஒற்றுமை ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.