வருக வருக புது யுகம் படைக்க: முதல் மாநாட்டுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை முதல் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளார். மதுரையில் நாளை கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவித்துவிட்டு தனது கட்சியின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார். கமல்ஹாசனின் கட்சியின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது முதல் அரசியல் கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அதில் கூறியதாவது: நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை சந்தித்து வரும் நிலையில் நாளைய முதல் பொதுக்கூட்டத்திலும் பல விஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசன் - சீமான் திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் தனது நெருங்கிய நண்பர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

அரபிக்கடலில் மிதந்ததா உபேர் கார்? ஃபேஸ்புக் பதிவு ஏற்படுத்திய பரபரப்பு

தனியார் வாடகைக்கார் நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே தங்களது சேவையை செய்துவருகின்றனர். நாம் புக் செய்த கார் எப்போது நம்மை வந்தடையும் என்பது உள்பட பல தகவல்களை கூகுள் மேப்

சகோதரி ஜோதிகாவுக்கு வைரமுத்து கூறிய அறிவுரை

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்திற்கு ஊடகங்கள் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தற்போது இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்

ஜனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்

கடந்த 90களில் ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்தவர் ஜனகராஜ் என்பது தெரிந்ததே. அவரது காமெடியும் பாடி லேங்வேஜூம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

'தளபதி 62' படக்குழுவினர்களுக்கு போடப்பட்ட திடீர் நிபந்தனை

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்