சூப்பர் ஸ்டார் படத்தை புரமோஷன் செய்த கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,September 27 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை வரும் ஞாயிறு அன்று முடிக்கவுள்ளதால் வெகுவிரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, 'தேவர் மகன் 2' மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது என அடுத்ததடுத்து சினிமாவிலும் அரசியலிலும் பிசியாக உள்ளார் கமல்ஹாசன்

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'சர்கார்' படத்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன், அமீர்கான் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'தக் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படம் வெளியாகவுள்ளதை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் லிங்கை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து அப்படத்திற்கு புரமோஷன் செய்துள்ளார். மேலும் இந்த படம் தமிழில் வெற்றி பெற அமிதாப், அமீர்கான் மற்றும் படக்குழுவினர்களுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

More News

அப்பல்லோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி

திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் அனுப்பிய அடுத்த பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று கிளைமாக்ஸை எட்டவுள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் விருந்தினர் வாரமாக உள்ளது.

சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிரபல நாயகி

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான Attarintiki Dhaaredhi என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே

ரஜினி, கமல் கட்சிகள் 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பதிலும் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை புதுப்பிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்ப அது 'விஸ்வாசம்' படத்தின் பாடல் இல்லையா?

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரி இணையத்தில் வைரலானது.