கலாம் இல்லத்தில் இருந்து கமல் தொடங்கும் கனவுப்பயணம்

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தது குறித்து நேற்று பார்த்தோம். மேலும் அதே நாளில் இராமநாதபுரத்தில் இருந்து மக்களை நேரில் சந்திக்கும் தனது அரசியல் பயணத்தையும் தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி என்பதால் அந்த ஊரை கொண்ட மாவட்டமான இராமநாதபுரத்தில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அனைவரும் எண்ணினர். ஆனால் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்

கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகவும், அவரைப்போல பல கனவுகளைக் கொண்டவன் நான் என்றும் கமல்ஹாசன் இந்த அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று என்றும் இறங்கி வேலை செய்ய வந்தவன் நான் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து கமல் தொடங்கும் இந்த பயணம் கலாமின் கனவுகளையும் நிறைவேற்றுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்

More News

ஒரே தயாரிப்பாளருடன் மூன்றாவது முறையாக இணையும் கவுதம் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் மகனும் இளையதலைமுறை நடிகருமான கவுதம் கார்த்திக் தற்போது கோலிவுட் திரையுலகில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் ஒரே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்

எம்ஜிஆர் மனைவி ஜானகி வேடத்தில் 'கபாலி' நடிகை

எம்ஜிஆரின் அனிமேஷன் திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்ற நிலையில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

மீண்டும் ஒரே மேடையில் ரஜினி-கமல்

மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் ரஜினி, கமல் ஒரே மேடையில் தோன்றிய நிலையில் இன்று நடைபெற்ற எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்க விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார்: திவாகரன் திடுக்கிடும் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் தேதி டிசம்பர் 5ஆம் தேதி காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கமல்ஹாசனுடன் அரசியல் கூட்டணி குறித்து ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.