கமல், அஜித், சூர்யா- தீபாவளிக்கு மோதும் நட்சத்திரங்கள்?

  • IndiaGlitz, [Monday,July 06 2015]

நடிகர் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சிவா இயக்கத்தில் சீராக வளர்ந்துகொண்டிருக்கிறது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் அண்மையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது, படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அஜித்தின் இந்த 56ஆவது படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

'மாசு' படத்துக்குப் பிறகு சூர்யா தன் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் '24'. விக்ரம் குமார் இயக்கும் இந்தப் படம் வேகமாக வளர்ந்துவருகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் கமல ஹாசன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் த்ரில்லர் படம் 'தூங்காவனம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது, இருந்தாலும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டு கமல் படங்கள் ('உத்தம வில்லன்', 'பாபநாசம்') வெளியாகிவிட்டதால் 'தூங்காவனம்' படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதே சரியாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுவதாகத் தெரிகிறது.

இந்தத் தகவல்களையும். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பண்டிகை/தேசிய விடுமுறை தினங்களில்தான் வெளியிடப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறையையும் கணக்கில்கொண்டு இம்மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வாய்ப்பிருப்பதாக திரைத் துறை வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

பாகுபலி 2ஆம் பாகத்தில் சூர்யா நடிக்கின்றாரா? ராஜமவுலி விளக்கம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள 'பாகுபலி' படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில்...

தீர்ந்தது பிரச்சனை. விக்ரம்-ஆனந்த் ஷங்கர் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விக்ரம் நடிக்கவிருக்கும்...

லட்சுமிராய் வெளியேறி பின்னரே உள்ளே நுழையும் சோனாக்ஷி சின்ஹா

இளையதளபதி விஜய்யுடன் இணைந்து 'கத்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது பாலிவுட்டில்...

'நான் எந்த தப்பும் பண்ணவில்லை' - வசுந்தரா

’வட்டாரம்’, ’பேராண்மை’, ’போராளி’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வசுந்தரா. ’தென்மேற்கு பருவக்காற்று’...

அஜீத் சாதனையை முறியடிப்பாரா விஜய்?

இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்களின் டீசரில் 'ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படம்தான் அதிகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸரை ஒரு கோடியே...