கமல் வைத்த பார்ட்டியில் யாஷிகா-ஐஸ்வர்யா கலந்து கொள்ளாதது ஏன்?

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறுடன் முடிவடைந்து அதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. ஐஸ்வர்யாவுக்கு இரண்டாமிடமும் விஜயலட்சுமிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு விருந்து வைத்தார். இந்த விருந்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாலும் மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில் இந்த விருந்து குறித்த புகைப்படங்கள் எதிலும் இந்த மூவரும் இல்லை. மேலும் இந்த விருந்தில் மகத் தன்னுடைய காதலி பிராச்சியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட பணிகளால் மூவராலும் இந்த விருந்தில் கலந்து கொள்ள முடியவில்லையா? அல்லது மூவரும் திட்டமிட்டு விருந்தை புறக்கணித்தார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப்பெண் வெற்றி பெற்றது இந்த மூவருக்கும் ஏமாற்றமாக இருந்ததாக கூறப்படுகிறது

More News

பாராளுமன்ற தேர்தலில் ரஜினிக்கு எத்தனை தொகுதி? ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் செய்து வரும் நிலையில் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்

பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்

கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு இளம்பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டது

தமிழகத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த தேதி

கேரளாவில் கடந்த மாதம் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் அங்கு வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டு கடவுளின் தேசம் என்று கூறப்படும் அம்மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியது.