ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன? கமலஹாசன்

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

நீட்தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா திடீரென தற்கொலை செய்து கொண்டார்

இந்த தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலைக்கு எதிராகவும் நீட்தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தில் குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா மரணம் குறித்தும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

More News

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை

நாளை நீட் தேர்வு எழுதாமல் விட்டால் மறுவாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி!!!

இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது.

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்!!!

கொரோனா நெருக்கடி நிலைமையில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருவதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பூமியை நோக்கி 38 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கும் ராட்சதகல்!!! பாதிப்பு இருக்குமா???

பூமியை நோக்கி 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு ராட்சத கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில்