நீதிமன்றம் ஏன் எம்.எல்.ஏக்களை எச்சரிக்கவில்லை. கமல்ஹாசன் கேள்வி

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்பதும் முதல்வர் உள்பட அனைவரையும் விமர்சித்து வருகிறார் என்பதும் அவரது டுவிட்டரை ஃபாலோ செய்து வரும் அனைவருக்கும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்த மதிப்புக்குரிய நீதிமன்றம், கடந்த சில நாட்களாக தங்களது பணியை செய்யாமல் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், மக்களுக்கு சேவை செய்யாமல் சொகுசு விடுதியில் வாரக்கணக்கில் தங்கியிருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கமல்ஹாசன் இந்த வேண்டுகோளை நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

தனுஷ் நடித்த 'விஐபி 2' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறா

சூர்யா-ஜோதிகாவுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து

பிரபல இயக்குனர் சுசீந்திரன் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் வாழ்த்து தெரிவித்து வருவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட பிசி ஸ்ரீராம்-தமன்னா

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய பிசி ஸ்ரீராம் படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு நட்சத்திரங்களின் விருப்பமாக உள்ளது என்பது தெரிந்ததே.

விஜய்சேதுபதி படத்தில் 3 முறை ஆஸ்கார் விருது வென்ற கலைஞர்

நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தை அடுத்து பாலாஜி தரணீதரன் இயக்கிய 'ஒருபக்க கதை' சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' டிரைலர் விமர்சனம்

பொதுமக்களை போனில் யாராவது மிரட்டி அதனால் அவர்கள் உதவி என்று கேட்டால் என்னுடைய சாப்ட்வேர் ஆன் ஆகி சிஸ்டம் லிங்க் ஆகும் என்று தனது வழக்கமான டெக்னாலஜி பாணியில் ஸ்பைடர்