close
Choose your channels

டுவிட்டரில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட பிசி ஸ்ரீராம்-தமன்னா

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய பிசி ஸ்ரீராம் படத்தில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு நட்சத்திரங்களின் விருப்பமாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் தெலுங்கு படம் ஒன்றில் முதன்முதலாக தமன்னா நடிக்கவுள்ளார்

இதுகுறித்து தமன்னா தனது டுவிட்டரில் கூறியபோது, 'உங்களுடன் இணைந்து ஒரு தமிழ் விளம்பர படத்தில் பணிபுரிந்ததை என்னால் இன்றும் மறக்க முடியாது. மீண்டும் உங்களுடன் இணைந்து திரைப்படத்தில் பணிபுரிவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

முன்னதாக பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் 'ஒரு அழகியுடன் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருந்தார். பிசி ஸ்ரீராம் ஏற்கனவே பாலிவுட் படமான அக்சயகுமாரின் 'பத்மன்' என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கின்றார் என்பதும் இந்த படத்தின் மூலம் அவர் இயக்குனர் பால்கியுடன் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்யாண்ராம், தமன்னா முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தை ஜெயேந்திரா என்பவர் இயக்கவுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.