கமலுடன் 27 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,November 03 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள கமலின் அடுத்த படத்தில் கடந்த 1980-90களின் பிரபல நடிகையும், நடிகர் நாகார்ஜூனனின் மனைவியுமான அமலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் 'சத்யா', 'வெற்றிவிழா' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிவிழா கடந்த 1987ஆம் ஆண்டிலும், சத்யா 1988ஆம் ஆண்டிலும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகையான ஜரினா வாஹாப் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு தீபாவளி கழித்து வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்க்காக காத்திருக்கும் 10 இயக்குனர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்றாலும்...

எம்.ஜி.ஆரின் பிரச்சனையை தீர்க்க விஷால் முயற்சி

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி நடித்த திரைப்படம் 'மதகஜ ராஜா (MGR). இந்த படம் கடந்த 2013ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்டாலும்...

ஹாலிவுட் படத்தை தவறவிட்ட ரஜினி நாயகி

கோலிவுட் நடிகைகள் பாலிவுட்டுக்கு செல்ல ஆசைப்படுவதும், பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டுக்கு செல்ல ஆசைப்படுவதும் வழக்கமான ஒன்றே...

விஜய் படத்தில் ஷங்கரின் பிரமாண்டம்

அட்லியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்காக விஜய் சமீபத்தில் 'செல்லாக்குட்டி'...

'படையப்பா' நீலாம்பரியை சமாளிப்பாரா தனுஷ்?

இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...