close
Choose your channels

கமலுடன் 27 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பிரபல நடிகை

Tuesday, November 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள கமலின் அடுத்த படத்தில் கடந்த 1980-90களின் பிரபல நடிகையும், நடிகர் நாகார்ஜூனனின் மனைவியுமான அமலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் 'சத்யா', 'வெற்றிவிழா' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிவிழா கடந்த 1987ஆம் ஆண்டிலும், சத்யா 1988ஆம் ஆண்டிலும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகையான ஜரினா வாஹாப் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு தீபாவளி கழித்து வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.