'காஞ்சனா 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 19 2019]

ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டர் ஒன்றின்மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'காஞ்சனா 3' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

 

More News

இங்கிலாந்து இளவரசரின் குழந்தைக்கு ஞானத்தாய் ஆகும் நம்மூர் நடிகை?

இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த ஆண்டு மே மாதம் தனது காதலி மேஹனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மேஹன் கர்ப்பமாக உள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

ரூ.125 கோடி வசூல் உண்மையா? இயக்குனர் சிவாவின் மெச்சூரிட்டியான விளக்கம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

96 தெலுங்கு ரீமேக்: ராம், ஜானு கேரக்டரில் நடிப்பது யார்?

கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று '96'. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களது பள்ளி காலத்து மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றதே

நயன்தாராவின் சகோதரி கேரக்டரில் திருநங்கை நடிகை

நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐரா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் தெரிந்ததே