வருமான வரி கூட கட்டமுடியவில்லை… கொரோனா தாக்கம் குறித்து பிரபல நடிகை உருக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் கொரோனா காரணமாக வேலை இல்லை. அதனால் கடந்த ஆண்டு வருமான வரியைக் கூட முழுமையாகச் செலுத்த முடியவில்லை எனத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இவரது கருத்து பலரது மத்தியில் தனிக் கவனம் பெற்று இருக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். இதுபோன்ற நிலமை சினிமா பிரபலங்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வருமான வரியை முழுமையாகச் செலுத்த முடியவில்லை. செலுத்தாத தொகைக்கு அரசு வட்டி விதித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து மீண்டு வருவோம் என நடிகை கங்கனா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “அதிகமாக வருமான வரி செலுத்துபவராக நான் இருக்கிறேன். கிட்டத்தட்ட எனது வருமானத்தின் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன். ஆனால் கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால் வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையை செலுத்த முடியவில்லை.

நான் தாமதமாக வருமான வரித்தொகையை செலுத்தியதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது. ஆனால் நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தை விட கடினமாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள “தலைவி“ திரைப்படம் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே பிரசவம்...! 10 பிஞ்சுகள்.... உலக சாதனை படைத்த பெண்...!

ஒரு பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி உலக சாதனை படைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறையில் புகாரளித்த விஷால்: என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

2027இல் இருந்து வந்த உலகின் கடைசி மனிதன்… நெட்டிசன்களை அலற வைக்கும் டிக்டாக் வீடியோ!

நடிகர் வில்லியம் ஸ்மித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் I am Legend.

பணமோசடியில் ஈடுபட்ட மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி… 7 ஆண்டு சிறை!

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஆஷிஷ் லதா ராம்கோபினுக்ககு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தளபதி விஜய் சுட்ட தோசை: த்ரோபேக் வீடியோ வைரல்

தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பழைய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் என்பதும் குறிப்பாக இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் அரிய வீடியோக்கள் வைரலாகி