'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்.. வேற லெவலில் வைரலாக்கும் சூர்யா ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற நிலையில் தற்போது முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிறுத்தை சிவா மற்றும் அவரது குழுவினர் விறுவிறுப்பாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு ஸ்டில் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்டில்லில் இயக்குனர் சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இருப்பதை அடுத்து தற்போது அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த ஸ்டில் பின்னணி அட்டகாசமாக இருப்பதால் இந்த படத்திற்கு வேற லெவலில் செட் போடப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த ஸ்டில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ள நிலையில் அதை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

More News

'கிக்' ரிலீஸ் ஆனதை அடுத்து சந்தானம் அடுத்த படத்தின் பிசினஸ் ஆரம்பம்.. முதல் போனியே முரட்டு போனி..!

சந்தானம் நடித்த 'கிக்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

திருமண நாளில் நல்ல செய்தி சொன்ன விஜய் டிவி புகழ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

விஜய் டிவி புகழ்  தான் காதலித்த பென்சி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது முதல் திருமண நாளை கொண்டாடினார்.

எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சூப்பர் பரிசு கொடுத்த கலாநிதி மாறன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

டி இமான் இசையில் பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்.. சந்தானம் படத்தில் நடந்த ஆச்சரியம்..!

தமிழ் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் பாடும் பாடல்கள் இடம் பெறுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகமாகி வருகிறது.

ஐபிஎல் கேகேஆர் அணியில் யோகிபாபு? ஷாருக்கான் விடுத்த அழைப்பு..!

சமீபத்தில் யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் இணைத்துக்கொள்ள தல தோனி சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது கேகேஆர் அணியில் யோகிபாபுவை இணைத்துக்கொள்ள ஷாருக்கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.