close
Choose your channels

வரும் தீபாவளிக்கு 5 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? எந்தெந்த படங்கள் பின்வாங்கும்?

Thursday, May 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஐந்து பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் சில படங்கள் பின்வாங்குமா? அல்லது ஐந்துமே தீபாவளி ரிலீசில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ சூர்யா நடித்து வரும் ’கங்குவா’, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23 ’பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ’எல்ஐசி’ மற்றும் கவின் நடித்து வரும் திரைப்படம் என மொத்தம் ஐந்து திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ’விடாமுயற்சி’ மற்றும் ’கங்குவா’ ஆகிய இரண்டுமே மாஸ் நடிகர்களின் படங்கள் என்பதால் இந்த இரண்டு படங்களுமே பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டால் மற்ற மூன்று படங்கள் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை அஜித்தின் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தாமதமாகி தீபாவளிக்கு வெளியாக முடியாத நிலை ஏற்பட்டால் சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 23’ படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் ’எல்ஐசி’ மற்றும் கவின் படம் தீபாவளிக்கு முன்போ அல்லது தீபாவளிக்கு பின்னரோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில் குறைந்தது 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருப்பதால் தீபாவளி நெருங்கும் நேரத்தில் தான் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதியாக கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment