தாய்-மகள்களிடம் கள்ளக்காதல்: வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு நேர்ந்த கதி!

  • IndiaGlitz, [Sunday,January 05 2020]

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு நபர், பெண் ஒருவரிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருடைய மகள்களிடமும் கள்ளக்காதலில் ஈடுபட்ட முயற்சி செய்ததால் பரிதாபமான வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி கட்டிட கட்டுமான பணி வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் அவர் தன்னுடைய நண்பர் என்று கூறி அலெக்சாண்டர் அந்த பெண்ணிடம் நட்புடன் பழகி ஒரு சில உதவிகளையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கள்ளக்காதல் வைத்திருந்த அந்த பெண்ணின் மகள்களிடம் அலெக்சாண்டர் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனால் தன்னுடைய மகள்களின் வாழ்க்கை பாழாகி விடுமோ என்ற பயத்தில் அலெக்சாண்டரை அந்தப் பெண் தவிர்த்ததாகதெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் மகன் ஜவஹர், தன்னுடைய தாயாரும் சகோதரிகளும் அலெக்சாண்டரிடம் சிக்கி உள்ளதை அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். தன்னுடைய நண்பர்கள் துணையுடன் கடந்த 25ஆம் தேதி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு வாகனத்தை கொண்டு மோதி அலெக்சாண்டரை கீழே விழ செய்துள்ளனர். அதன் பின்னர் அலெக்சாண்டர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நிலைகுலையச் செய்து ஜவஹரும் அவரது நண்பர்களும் அலெக்சாண்டரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் விசாரணை செய்தபோது ஜவஹர் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் கொலை செய்தனர் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

'தல அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

அந்த நடிகையின் திறமையை வெளியே கொண்டு வந்தே தீருவேன்: அட்லி

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் விஜய் நடித்த 'தெறி', மெர்சல் மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று விஜய் படங்களை

'தர்பார்' படத்தால் எனக்கு மிகுந்த மனவருத்தம்: பிரபல இசையமைப்பாளர் பேட்டி

'தர்பார்' படத்தால் தனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக பிரபல இசை அமைப்பாளரும் இசையமைப்பாளர் சங்கத் தலைவரும் தீனா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'தர்பார்' படத்திற்கு திடீர் போராட்டம்: திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது.